ETV Bharat / city

’முதுகலை மருத்துவ நுழைவுத்தேர்வு மையங்களை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்’ - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

முதுகலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு மையங்களைத் தமிழ்நாட்டில் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

TN CM
TN CM
author img

By

Published : Nov 17, 2020, 4:59 AM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “ஐஎன்ஐ, டெல்லி எய்ம்ஸ், புதிய எய்ம்ஸ், ஜிப்மர், பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் ஆகியவற்றில் சேர நவம்பர் 20ஆம் தேதி முதுகலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு எழுதுவதற்கான மையங்கள் சித்தூர், நெல்லூரில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்ல வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளதால் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே இந்த விஷயத்தில் தயவுசெய்து தலையிட்டு, அவர்கள் விரும்பும் தேர்வு மையங்களைத் தமிழ்நாட்டிற்குள் தேவைப்பட்டால் உருவாக்க, சுகாதார அமைச்சகத்தை வழிநடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.