ETV Bharat / city

Tablet: கரோனாவுக்கு மாத்திரை கண்டுபிடித்து அசத்திய நிறுவனம்! - ஒமிக்ரானுக்கு மாத்திரை கண்டுபிடிப்பு

Tablet: கரோனா பாதிப்புக்குள்ளானோர் உட்கொள்ளும் வகையில் "பாக்ஸ்லோவிட்" (Paxlovid) என்ற மாத்திரையை ஃபைசர் நிறுவனம் தயாரித்து அசத்தியுள்ளது.

கரோனாவுக்கு மாத்திரை கண்டுபிடித்து அசத்திய நிறுவனம்!

author img

By

Published : Dec 19, 2021, 3:47 PM IST

Tablet Based News: உலக அளவில் சில மாதங்களுக்கு முன்னர் கரோனா தொற்றின் இரண்டாம் அலையால் பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, தொற்று பரவலாக குறையத் தொடங்கியது. இருப்பினும் கல்வியறிவு பெற்ற பலரும் கூட தடுப்பூசி செலுத்த இன்றளவும் தயங்குகின்றனர்.

இறப்பு விகிதத்தைக் குறைக்கும் கரோனா தடுப்பு மாத்திரை

மக்களின் அச்சத்துக்கு முடிவுரை எழுதும் வகையில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர், கரோனாவுக்கு எதிராக "பாக்ஸ்லோவிட்" (Paxlovid) என்ற மாத்திரையைத் தயாரித்துள்ளது. இந்த மாத்திரையை கரோனா அறிகுறிகள் தென்பட்ட 3 நாட்களில் உட்கொண்டால் உயிரிழப்பு விகிதமானது குறைவதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒமைக்ரானுக்கும் பயன்படுகிறதா?

இந்த மாத்திரையானது 89 விழுக்காடுவரை கரோனாவுக்கு எதிராக ஆற்றல் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஃபைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆல்பர்ட் போர்லா பேசுகையில், "பாக்ஸ்லோவிட் மாத்திரையை எடுத்துக் கொண்டால், ஒமைக்ரான் உள்ளிட்ட மோசமான அனைத்து வகை கரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Omicron பரவல் - டெல்லியில் 4 தனியார் மருத்துவமனைகள் ஒமைக்ரான் சிகிச்சை மையங்களாக மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.