ETV Bharat / city

திருந்தி வாழ அனுமதிக்கக் கோரி சென்னை ஆணையரிடம் வழிப்பறிக் கொள்ளையன் மனு!

சென்னை: திருநின்றவூரைச் சேர்ந்த திருட்டு, வழிப்பறியில் ஈடுபடும் மகேஷ் என்பவர் திருந்தி வாழப் போவதாக, காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

Police magesh, Police magesh cop complaint, சென்னை ஆணையரிடம் வழிப்பறி கொள்ளையன் மனு, திருந்தி வாழ அனுமதிக்க கோரி
திருந்தி வாழ அனுமதிக்க கோரி
author img

By

Published : Feb 2, 2020, 11:48 AM IST

சென்னை திருநின்றவூரைச் சேர்ந்தவர் மகேஷ் என்கிற ’போலீஸ் மகேஷ்’. இவர் மீது, வட சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், தன்னை காவல் அலுவலர் எனக்கூறி தனியாக செல்லும் முதியவர்களிடம் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டுட்டார்.

இச்சூழலில், இனி மேல் வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடமாட்டேன் என்றும், தான் திருந்தி வாழ வாய்ப்பு வழங்கக்கோரி, சென்னை காவல் துறை ஆணையரை சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் இது தொடர்பாக மகேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக, தன் மீது வட சென்னை காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது, பல முறை சிறைக்குச் சென்று திரும்பியுள்ளேன். சிறையில் இருந்து திருப்பிய பின்னரும் முதியவர்களிடம் காவல் அலுவலர் எனக்கூறி, வழிப்பறி ஈடுபட்டு வந்தேன்.

இது தொடர்பாக, என்னை மட்டுமல்லாமல் என் குடும்பத்தினரையும் தொடர் விசாரணைக்கு காவல் துறையினர் உட்படுத்தி வருகின்றனர். தொடர் விசாரணைக்கு குடும்பத்தினரை அழைப்பதால் ஏற்பட்ட மிகுந்த மன உளைச்சலால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ்வதற்கு அனுமதி கோரி சென்னை காவல் துறை ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ளேன்.” என்றார்.

திருந்தி வாழ அனுமதிக்கக் கோரி மனு அளித்த கொள்ளையன் மகேஷ்க்கு, உதவி புரிந்ததாக தேனாம்பேட்டையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் குருமூர்த்தி என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:பிரபல வழிப்பறிக் கொள்ளையர் திருந்தி வாழ போவதாக சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு.

சென்னை திருநின்றவூரைச் சேர்ந்தவர் மகேஷ் என்கிற போலீஸ் மகேஷ். இவர் மீது வட சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தன்னை போலீஸ் என கூறி தனியாக செல்லும் முதியவர்களிடத்தில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் இனி வழிப்பறிக் கொள்ளை மற்றும் திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டேன் எனவும் தான் திருந்தி வாழ போவதாகவும் சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் நிறைய திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாகவும். தன் மீது வட சென்னை காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகாவும், இதனால் பலமுறை சிறைக்குச் சென்று வந்ததாகவும் கூறினார். சிறைக்கு சென்று வந்த பின்பும் தனியாக செல்லும் முதியவர்களிடம் தான் ஒரு போலீஸ் எனக்கூறி வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்த மகேஷ், காவல்துறையினர் என்னை மட்டும் அல்லாமல் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வந்தனர்.

இதனால் என் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக கூறியவர் இனிமேல் தான் வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ போவதாக சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து மனு அளித்ததாக மகேஷ் என்கிற போலீஸ் மகேஷ் கூறினார்.

கடந்த வாரம் பிரபல வழிப்பறிக் கொள்ளையருக்கு உதவியதாக தேனாம்பேட்டையை சேர்ந்த உதவி ஆய்வாளர் குருமூர்த்தி என்பவரை காவல்துறை இணை ஆணையர் சஸ்பெண்ட் செய்தார். தற்போது தான் திருந்தி வாழ போவதாக காவல்துறை ஆணையரிடம் மனு அளித்த மகேஷ் என்கிற போலீஸ் மகேஷுக்கு தான் உதவி ஆய்வாளர் குருமூர்த்தி உதவி புரிந்து சஸ்பெண்ட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.