ETV Bharat / city

மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: தமிழ்நாடு அரசின் கரோனா நிவாரண நிதியுதவித் தொகையான 4,000 ரூபாயை மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருநங்கைளுடன் ஸ்டாலின், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கரோனா நிவாரணநிதி, stalin with transgenders, corona relief funds for transgenders
corona relief funds for transgenders
author img

By

Published : May 19, 2021, 5:53 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு தாக்கல் செய்துள்ள மனுவில், "கரோனா பேரிடர் காலத்தில், அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவியாக நான்காயிரம் ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், இந்த உதவித்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "கரோனா பேரிடர் காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள், தங்கள் மருத்துவ தேவைகளையும் வாழ்வாதாரத்தையும் பூர்த்தி செய்ய கடும் சவால்களை எதிர்கொண்டோம்.

தமிழ்நாட்டில் 50 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளபோதும், 11,499 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களில் 2,541 பேருக்கு மட்டுமே ரேஷன் அட்டைகள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவியபோது, ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமில்லாமல், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், கடந்த இரு ஆண்டுகளாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தற்போது 6,553 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், நான்காயிரம் ரூபாய் நிவாரண உதவியை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் நாளை (மே.20) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வாட்ஸ்அப் மூலம் 12ஆம் வகுப்பு அலகுத் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.