ETV Bharat / city

அவதூறு செய்தி வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டல்: நபர் கைது

அவதூறு செய்தி வெளியிடாமல் இருக்க தனியார் நிறுவனத்தின் ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவதூறு
நபர் கைது
author img

By

Published : May 23, 2022, 7:01 AM IST

Updated : May 23, 2022, 10:56 AM IST

சென்னை: ஜி ஸ்கொயர் ரியால்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றிவரும் புருஷோத்தமன் குமார் என்பவர் மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஜி ஸ்கொயர் ரியால்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர், இயக்குநர் ராமஜெயம் (எ) பாலா என்பவரிடமிருந்து தான் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக கெவின் குற்றஞ்சாட்டுகிறார்.

பிரபல வார நாளிதழின் ஆசிரியர் தனக்கு நெருக்கமானவர் என்று கூறிக்கொண்டு கெவின் கம்பெனி குழுமத்தின் நிறுவனர், இயக்குநர் பற்றியும் கம்பெனி பற்றியும் பெய்யான மிகைப்படுத்தப்பட்ட கட்டுரையை வெளியிட இருப்பதாகவும், அதனை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டும் மிரட்டுகிறார்.

பணம் கொடுக்க மறுத்ததால் online edition இல் தொடர்ச்சியாக கம்பெனி பற்றியும் மேற்படி கம்பெனி குழுமத்தின் நிறுவனர், இயக்குநர் பற்றியும் வேண்டுமென்றே பொய்யான, ஆதாரமற்ற கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டதாக மிரடினார்.

மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் கம்பெனி நிறுவனர், இயக்குநரை தொடர்புக்கொண்டு பிரபல வார நாளிதழின் இயக்குநருக்கு நெருக்கமானவர் என்று கூறி, கெவின் ரூ.50 லட்சம் தரவேண்டும் என்றும் இல்லை என்றால் வார நாளிதழின் அடுத்த இதழில் கம்பெனி பற்றியும் இயக்குநர் பற்றியும் தரக்குறைவாகவும் கம்பெனியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாகவும் செய்தி வெளியிடப்படும் என்றும் மிரட்டுகிறார்.

மேலும் மாரிதாஸ் மற்றும் சவுக்கு சங்கர் ஆகியவர்கள் மூலம் YOU TUBE CHANNEL மற்றும் TWITTER மூலம் தரக்குறைவாக ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதாக மிரட்டினர். இதனால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் கெவின் என்பவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மிரட்டி பணம் பறிக்கும் நோக்கம் உட்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சென்னை கோவிலம்பாக்கம் வீட்டில் பதுங்கியிருந்த கெவினை கைது செய்தனர். அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த Air pistol, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு, கெவின் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

மேலும் இவ்வழக்கு தொடர்பாக வார நாளிதழ் ஆசிரியர், யூடியூபர் மாரிதாஸ், சவுக்கு சங்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தருமபுரம் ஆதீன பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி கோலாகலம்

Last Updated : May 23, 2022, 10:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.