சென்னை பூவிருந்தமல்லியில் உள்ள சாலைக்குப் பெரியார் நூற்றாண்டு விழாவின்போது எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தின்போது ஈவேரா பெரியார் நெடுஞ்சாலை எனப் பெயரிடப்பட்டது.
1979இல் பெரியார் நூற்றாண்டு விழாவை ஓராண்டு விழாவாக, தொடர் விழாவாக நடத்தியது எம்ஜிஆர் தலைமையில் நடந்த அதிமுக. அரசு. அப்போது, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை 'பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ என்று மாற்ற வேண்டும் என்ற மக்கள் விடுத்தகோரிக்கையை ஏற்று அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் பெயர் மாற்றம் செய்து ஆணை பிறப்பித்தார்.
விஷமத்திற்கு யார் காரணம்?
ஆனால், நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில் பெரியார் பெயரை நீக்கிவிட்டு ‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’ என்று பெயர் மாற்றம் செய்து நெடுஞ்சாலைத் துறை சார்பில் செய்யப்பட்டது.
இந்தப் பெயர் மாற்றத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள், பெயர் மாற்றம் செய்தது ஏன், யாரைத் திருப்தி செய்ய, என்ன பின்னணி - விஷமத்திற்கு யார் காரணம், யார் பொறுப்பு எனக் கேள்வி எழுப்பியதோடு இதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனத் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இதனிடையே இன்று அதிகாலை 1.30 மணியளவில் அழிக்கப்பட்ட பெயர்ப் பலகையில் மீண்டும் பெரியார் ஈவேரா சாலை என்ற ஒட்டுவில்லை ஒட்டப்பட்டுள்ளது.