ETV Bharat / city

உழைக்கும் மக்களுக்காகத்தான் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார் - எல்.முருகனுக்கு பெரியகருப்பன் பதில் - MGNREGS balance amount

நூறு நாள் வேலைத்திட்டத்தில் உழைக்கின்ற மக்களுக்கு உரிய நேரத்தில் ஊதியத்தை வழங்கவேண்டும் என்ற அக்கறையின் காரணமாகத்தான் தீபாவளிப் பண்டிகையையொட்டி முதலமைச்சர் கடிதம் எழுதினாரே தவிர, இதில் எந்த விதமான அரசியல் ஆதாயத்திற்கான நடவடிக்கையும் இல்லை என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனுக்கு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

l murugan, எல் முருகன், பிரதமர் மோடியுடன் இணையமைச்சர் எல்.முருகன், l murugan with modi, modi, முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அமைச்சர் பெரியகருப்பன், periyakaruppan, mk stalin, stalin, cm stalin, periyakaruppan and l murugan
periyakaruppan replied for l murugan allegations in MGNREGS
author img

By

Published : Nov 7, 2021, 8:30 PM IST

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரமதருக்கு எழுதிய கடிதம் குறித்து ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பதில் அளித்துள்ளார்.

அதில்,"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005, ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊரகப் பகுதிகளில் திறன் சாரா உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆண்டில் 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க உறுதி செய்கிறது.

செப்.15க்கு பின் ஒதுக்கப்படவில்லை

l murugan, எல் முருகன், பிரதமர் மோடியுடன் இணையமைச்சர் எல்.முருகன், l murugan with modi, modi
பிரதமர் மோடியுடன் இணையமைச்சர் எல்.முருகன்

இந்த நிதியாண்டில் தொழிலாளர்களின் ஊதியத்திற்கென செப். 2021 வரை ஒன்றிய அரசால் விடுவிக்கப்பட்ட ரூ.3,524.69 கோடி முழுவதும், செப்.15ஆம் தேதிவரை வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. அதற்குப் பின்னர் ஊதியத்திற்கென ஒன்றிய அரசு எந்த நிதியும் ஒதுக்காமல் இருந்ததால் ஊதிய நிலுவை உயர்ந்து கொண்டே வந்தது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் வாரத்தின் வியாழன் தொடங்கி அடுத்த வாரம் புதன் வரை நடைபெறும். வேலை முடிந்த தினம் தொடங்கி எட்டு தினங்களுக்குள் ஊதிய பட்டியல் தயார் செய்தல், ஊதியப் பரிமாற்ற ஆணைப் பதிவேற்றம் ஆகியன உரிய நேரத்தில் மாநில அரசால் செய்து முடிக்கப்பட்டு அடுத்த ஏழு தினங்களுக்குள் ஒன்றிய அரசால் ஊதியம் வழங்கப்படுவது வழக்கம்.

முதலமைச்சர் கடிதம்

ஆனால் செப்.15 தேதிக்குப் பிறகு அக்.5 வரை ஊதியம் வழங்கப்படாததாலும், இக்கால கட்டத்தில் ஊதிய நிலுவை ரூ.561.81 கோடியாக உயர்ந்ததாலும் உடனடியாக ஊதியத்திற்கான நிதியினை விடுவிக்குமாறு ஒன்றிய அரசிடம் அக்.5 நாளிட்ட கடிதத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், அக்.26ஆம் தேதிவரை ஊதிய நிலுவை ரூ.1,046.20 கோடியாக மேலும் உயர்ந்ததைத் தொடர்ந்து, நானும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை முதன்மைச்செயலர் இருவரும், ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சர் மற்றும் ஒன்றிய அரசு செயலரை அக்.27ஆம் தேதியன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்.

முதலமைச்சர் கடிதம் குறித்த செய்தி வெளியூடு
முதலமைச்சர் கடிதம் குறித்த செய்தி வெளியீடு

மேற்காணும் தொடர்ச்சியான கோரிக்கைகள் விடுத்தும், ஒன்றரை மாதம் கடந்தும் ஊதியத்திற்கான நிதி விடுவிக்கப்படாததாலும், ஊதிய நிலுவை ரூ.1,178.12 கோடியாக உயர்ந்ததாலும் தீபாவளிப் பண்டிகையை சுட்டிக்காட்டி உடலுழைப்பைத் தந்தவர்களுக்கு ஊதிய நிலுவையினை உடனடியாக விடுவிக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 1, 2021 நாளிட்ட கடிதத்தில் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

இணை அமைச்சரின் கருத்து குறித்து

முதலமைச்சரின் கடிதத்தைத் தொடர்ந்து ஒன்றிய அரசால் நவம்பர் 2ஆம் தேதி ஊதியத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிப் பண்டிகைகக்கு சில தினங்களே இருந்ததாலும், 20 லட்சம் தொழிலாளர்கள் ஊதியம் பெற்று தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நல்லெண்ணத்திலேயே, எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லாமல் ஊதிய நிலுவையினை வெளியிடக்கோரி முதலமைச்சரால் கடிதம் அனுப்பப்பட்டது.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சமூக தணிக்கை பத்திகள் குறித்து ஒன்றிய இணை அமைச்சர் தெரிவித்த கருத்துகள் மீதான உண்மை நிலை பின்வருமாறு:

மாவட்ட சமூக தணிக்கை குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில், கடந்த 2017-18ஆம் ஆண்டில் ரூ.92 கோடியாகவும், 2018-19இல் ரூ.116 கோடி எனவும் 2019-20ஆம் ஆண்டில் ரூ.38 கோடி எனவும் மொத்தம் ரூ. 246 கோடிக்கு நிதி முறைகேடுகள் நடைபெற்றது என NREGA இணைய தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி இழப்பீட்டுத் தொகையில் நாளது தேதிவரை ரூ.1.87 கோடி மாவட்ட அளவிலான உயர்நிலைக் குழு மூலம் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையினை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்படும். தேவையான இடங்களில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

முறைகேடுகள் தவிர்க்கப்படும்

சமூகதணிக்கை தடை பத்திகளை நிவர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியர்/மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையின் கீழ் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு தணிக்கை பத்திகள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.

ஆனால், உயர்மட்டக் குழுகூட்டங்கள் கரோனா தொற்று காரணமாக நடத்தப்படாததால் நிலுவையில் உள்ள தணிக்கைத் தடை பத்திகள் நிவர்த்தி செய்யப்படவில்லை மற்றும் இழப்பீட்டுத் தொகையையும் மீட்க இயலவில்லை.

முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அமைச்சர் பெரியகருப்பன், periyakaruppan, mk stalin, stalin, cm stalin
முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அமைச்சர் பெரியகருப்பன்

தற்போது, ஜூன் 2021 முதல் ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரால் உயர் மட்டக் குழு கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு தணிக்கை பத்திகள் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றன.

வருங்காலங்களில் இத்திட்டத்தின்கீழ் முறைகேடுகள், இழப்பீடுகள் நிகழ்வதைத் தவிர்க்கவும், பணிகளின் தரத்தினை உயர்த்தவும், மாநில, மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அளவில் அலுவலர்களால் தொடர்ந்து ஆய்வு செய்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், உழைக்கின்ற மக்களுக்கு உரிய நேரத்தில் ஊதியத்தை வழங்கவேண்டும் என்ற அக்கறையின் காரணமாகத்தான் அமைச்சரை சந்திக்க செய்ததோடு தீபாவளிப் பண்டிகையையொட்டி முதலமைச்சர் கடிதம் எழுதினாரே தவிர, இதில் எந்த விதமான அரசியல் ஆதாயத்திற்கான நடவடிக்கையும் இல்லை என்பதை ஒன்றிய இணையமைச்சர் எல். முருகனுக்கு தெரிவிக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.