வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும். துன்பம் வரும் வேளையில் சிரித்தால் துக்கம் நீங்கும் என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல. அதனை பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளும் உறுதி படுத்தி உள்ளன.
அப்படி நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவதில் சிரிப்பிற்கும் நகைச்சுவை உணவிற்கும் பெரும் பங்கு உண்டு. அழதுகொண்டே பிறக்கும் நாம்
மழலை சிரிப்பில் கவரத் தொடங்குகிறோம். பருவகாலங்களில் எதற்கெடுத்தாலும் சிரித்து சிரித்து தள்ளிய நாம், நாளடைவில் காரணம் இல்லாமல் சிரித்தால் உற்றுப் பார்க்கப் படுகிறோம். தனியாக சிரிப்பவன் பைத்தியாமா என்ன?. மனவருத்தம் என்று போனால் சிரிக்கதானே உளவியலாளர்கள் சொல்கிறார்கள்.
இப்படிபட்ட சூழலில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜெனிபர் ஆகேர், விரிவுரையாளர் நவோமி பாக்டோனாஸ் இருவரின் ஆய்வில், மக்கள் தங்களது 23 வயதில் நகைச்சுவை உணர்வை இழக்கத் தொடங்குகிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த முடிவுகள் ஹுயுமர், சீரியஸ்லி (Humour, Seriously) எனும் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 166 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை முறை சிரிக்கிறார் என்பதை கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
அதில், 23 வயதை கடந்தவர்களின் சிரிக்கும் முறையின் விகிதம் மிகவும் குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 23 வயதை ஒருவர் எட்டும்போது, வாழ்க்கையின் பொறுப்புகளுக்கு கட்டுப்பட்டுவிடுகிறார்.
23 வயதிற்குப் பிறகு மேற்படிப்புகள், பணி, கடமைகள், கட்டுபாடுகள், சமூக நடைமுறைகள் என பல்வேறு சுமைகள் முதுகில் ஏற்றப்பட்டுவிடுகின்றன. சிரித்தால் முத்தா கொட்டிவிடப்போகிறது. 23 வயதுக்கு பிறகு சிரித்தால் தண்டனையா தரப்போகிறார்கள் சிரியுங்கள் நண்பர்களே.
இதையும் படிங்க: சிரிப்பு போலீஸ் டூ சீரியஸ் போலீஸ் - நடிகர் ஜார்ஜ் மரியம் கலகல பேட்டி