நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 எம்.எல்.டி. திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காகச் சூளேரிக்காட்டுக்குப்பம் கிராம மக்களுடன் வாழ்வாதாரம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்ட ஒப்பந்ததாரர்கள், சூளேரிக்குப்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, வீட்டுமனைப் பட்டா வழங்குதல், சாலை வசதி, குடிநீர் வசதி, சமூகக் கூடங்கள் கட்டித் தருதல், இளைஞர்களுக்கு இத்திட்ட கட்டுமான பணி, பராமரிப்புப் பணிகளில் வேலைவாய்ப்பு, மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு ஐந்தாயிரம் நிதியுதவி, விளையாட்டு மைதானம், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான மனுக்களை சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநரிடம் சூளேரிக்குப்ப மக்கள் வழங்கினர்.
அப்போது பேசிய செயல் இயக்குநர் பிரபுசங்கர், பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் திடீர் தீ - பொதுமக்கள் பெரும் அவதி