வேலூர்: முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று தொரப்பாடியிலுள்ள வேலூர் ஆண்கள் மத்தியச் சிறையில், 30 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவருகிறார் முருகன். இவர் தனக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு சிறைத் துறை மூலம் மு.க. ஸ்டாலினுக்கு மனு அளித்துள்ளார்.
பரோல் நினைவூட்டல் மனு
மேலும், இது தொடர்பாகக் கடந்த மாதமே முதலமைச்சருக்குச் சிறைத் துறை மூலம் மனு அனுப்பியிருந்த நிலையில், நேற்று (ஜனவரி 3) நினைவூட்டல் மனுவை அனுப்பியுள்ளார். அம்மனுவில், "இதே வழக்கில் பெண்கள் தனிச்சிறையிலுள்ள, எனது மனைவி நளினி பரோலில் செல்ல உள்ளதாலும், இருவருக்கும் சிகிச்சைத் தேவைப்படுவதாலும், ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ள எனக்கும் பரோல் வழங்க வேண்டும்" என முருகன் குறிப்பிட்டுள்ளார்.
வேலூர் பெண்கள் தனிச் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் நளினி, 30 நாள்கள் பரோலில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி வெளியே வந்த நிலையில் காட்பாடி பிரம்மபுரத்தில் தனது தாயார் தங்கியுள்ள வீட்டில் தற்போது நளினியும் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு மாத பரோல்: சிறையிலிருந்து வெளியே வந்த நளினி!