தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்று இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுவருகிறது. மேலும் தேர்தல் பறக்கும் படையினர் தமிழ்நாட்டில் சோதனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
தற்போது தமிழ்நாட்டில் 65 துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 235 துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு வரவுள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
மொத்தமாகத் தேர்தலின்போது 300 துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் இவர்கள் பதற்றமான 118 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள்.
மேலும் தமிழ்நாட்டில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் தடம்பதிக்கிறதா பாஜக... அரியணை ஏறுகிறாரா ரங்கசாமி?