ETV Bharat / city

உழவர்களின் முதலமைச்சரா இபிஎஸ்?

சென்னை: தேர்தல் பரப்புரைகளில் 'நான் ஒரு விவசாயி' என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து உழவர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார். தேர்தல் நேரத்தில் உழவர்கள் மீதான இந்தத் திடீர் ஆதரவு வாக்குகளாக மாறுமா என்பது தேர்தல் முடிவுக்குப் பின்னர்தான் தெரியவரும்.

விவசாயி இபிஎஸ்
விவசாயி இபிஎஸ்
author img

By

Published : Feb 21, 2021, 12:19 PM IST

Updated : Feb 22, 2021, 10:12 AM IST

உழவர்களின் 100 ஆண்டுகால கனவு, 68 ஆண்டுகால கோரிக்கை, 7 மாவட்டங்கள் பயனடையும் திட்டமான காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு புத்துயிரூட்டி இருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

உழவர்களின் முதலமைச்சரா இபிஎஸ்?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, விவசாய பம்பு செட்டுகளுக்கு இனி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும், கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் உழவர்கள் வாங்கியுள்ள 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று விவசாயிகளுக்கான அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டுவரும் முதலமைச்சர் பழனிசாமி, இன்று காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தைத் தொடங்கிவைத்துள்ளார்.

அன்று காமராஜர்... இன்று இபிஎஸ்...

1958இல் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு 189 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். ஆனால் திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

விவசாயிகளின் முதலமைச்சர் இபிஎஸ்
உழவர்களின் முதலமைச்சரா இபிஎஸ்?

காவிரி-குண்டாறு இணைப்பு

ஏழு மாவட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கைவைத்து பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் ஆகியவற்றை நடத்திவந்தனர். இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகளைத் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நூறாண்டு கால நெடும் கனவு

இதையடுத்து, முதலமைச்சர் பழனிசாமி இன்று (பிப். 21) புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் 1,941 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு ஆறுகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், மூன்றாயிரத்து 384 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல், நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளைப் புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

விவசாயிகளின் 100 ஆண்டு கனவு திட்டம்
உழவர்களின் 100 ஆண்டு கனவுத் திட்டம்

இவ்விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசுப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நூற்றாண்டு கால நெடும் கனவு

வெள்ளக்காலங்களில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் 40 டி.எம்.சி.க்கு மேல் உபரிநீர் கடலில் கலக்கிறது. காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் நூற்றாண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.

இதன்மூலம் ஏறத்தாழ 50 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற முடியும். இந்த இணைப்புத் திட்டத்தை அடுத்து தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டம் அதிக பயன்பெறும்.

பயன்பெறும் 7 மாவட்டங்கள்
பயன்பெறும் 7 மாவட்டங்கள்

பயன்பெறும் 7 மாவட்டங்கள் (வட்டங்கள்)

  • கரூர் (குளித்தலை, கிருஷ்ணராயபுரம்)
  • திருச்சி (திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம்)
  • புதுக்கோட்டை (குளத்துார், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், ஆவுடையார்கோவில்)
  • சிவகங்கை
  • விருதுநகர் (திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை)
  • தூத்துக்குடி (விளாத்திக்குளம்)
  • ராமநாதபுரம்

இனி பாலைவனம்கூட சோலைவனம் தான்

1,941 கோடி ரூபாய் மதிப்பிலான முதல்கட்டத்திற்கு தற்பொழுது அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன்மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலமும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ. நீளத்திற்கு கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது.

இனி தென் தமிழ்நாடு செழிப்புதான்
இனி தென் தமிழ்நாடு செழிப்புதான்

இரண்டாவது கட்டமாக புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 220 ஏரிகளும், 23 ஆயிரத்து 245 ஏக்கர் நிலமும் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றிலிருந்து 109 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் உருவாக்கி வைகையுடன் இணைக்கப்படுகிறது.

மூன்றாவது கட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள், 44 ஆயிரத்து 547 ஏக்கர் நிலமும் பயன்பெறும் வகையில் 34 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது.

14 ஆயிரத்து 400 கோடி ரூபாயில் 262 கி.மீ. தூரத்திற்கு நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6,300 கனஅடி தண்ணீர் ஆக்கப்பூர்வமாக திருப்பப்படுவதால் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரிப்பதோடு, மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்.

இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 1,054 ஏரிகள், ஒரு லட்சத்து 9,962 ஏக்கர் நிலம் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் பாசனத்திறன்

காவிரி உப வடிநிலத்திலுள்ள உள்கட்டமைப்புகளில் விரிவாக்கம், புதுப்பித்தல், நவீனப்படுத்தல் திட்டத்தின்கீழ் புனரமைக்கும் பணிகள் மூன்றாயிரத்து 384 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் 987 கி.மீ. நீளமுள்ள 21 ஆறுகளின் மொத்த பாசன பரப்பான நான்கு லட்சத்து 67 ஆயிரத்து 345 ஏக்கர் நிலம் பாசனம் உறுதிசெய்யப்படும்.

மேலும், காவிரி டெல்டாவிலுள்ள பழமைமிக்க பாசன கட்டுமானங்கள் ஸ்காடா தொழில்நுட்பம் (SCADA) மூலம் 72 கோடி மதிப்பில் தானியங்கி அமைப்புகள் நிறுவப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் காவேரி உப வடிநில கால்வாய்களின் பாசனத்திறன் 20 விழுக்காடு அதிகரிக்கப்படும்.

தன்னை ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து விவசாயிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுவந்தாலும் உழவர்களின் ஆதரவு வாக்குகளாக மாறுமா என்பது தேர்தல் முடிவுக்குப் பின்னர்தான் தெரியவரும்.

Last Updated : Feb 22, 2021, 10:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.