சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் வேட்புமனு தாக்கலுக்கு பின் சென்னை தலைமைச் செயலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரெய்டுகள் குறித்து கேட்கையில், “என்னை பார்த்து பயப்பட சிங்கமா புலியா. நான் ஒரு மனிதன். காங்கிரஸ் கட்சியை பிரதிபலிக்கும் மனிதன்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை அழுத்தமாக, உரத்த குரலில் சொல்லி வருபவன். என்னை பார்த்து பயப்படுவதாக நினைக்கவில்லை. காங்கிரஸின் கொள்கையைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள்", என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
அனைவரும் கூடி இந்த வேட்புமனுவை தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் நாளையோடு வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைகிறது. வரும் 3ஆம் தேதி வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள். மூன்றாம் தேதி மாலை, தேர்தல் இருக்கிறதா என்பது தெரியும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, 18 வருடங்களாக கட்சியில் இருக்கும் எங்களுக்கு தகுதி இல்லையா என நக்மா ட்வீட் குறித்த கேள்விக்கு ”10 இடங்கள் மட்டுமே இருந்ததால் சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆர்யன்கான் வழக்கும் என் மகன் வழக்கும் ஒன்று தான் - ப.சிதம்பரம்