ETV Bharat / city

அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கரோனா? - பற்றவைத்த ஸ்டாலினின் ட்வீட்!

சென்னை: தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதா என்ற சர்ச்சை திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்டால் கிளம்பியுள்ளது.

கேபி அன்பழகன்
கேபி அன்பழகன்
author img

By

Published : Jun 19, 2020, 1:42 PM IST

உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து அமைச்சர் அன்பழகன், தனக்கு சாதாரண காய்ச்சல்தான் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே மருத்துவமனை சென்று வந்ததாகவும் கூறினார். மேலும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும்; பொதுவாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் தரப்பில் பாதிப்பில்லை எனத் தெரிவித்த பின்னர், ஸ்டாலின் இவ்வாறு ட்விட்டரில் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஸ்டாலின் பதிவு குறித்து அமைச்சர் தரப்பிலிருந்து எந்தவித மறுப்புத் தகவலோ, விளக்கமோ வரவில்லை.

மேலும், அமைச்சரின் கார் ஓட்டுநருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சுடு தண்ணீர் கூட கொடுப்பதில்லை; கரோனா பாதித்தவர்கள் சரமாரி குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.