சென்னை: இந்தியா முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தேசிய தகுதி தேர்வு (NEET) நடைபெறுகிறது. கடந்த ஜூலை 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தேசியத் தேர்வு முகமை அறிவித்திருந்து.
அதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதுவதற்கு அவர்கள் படித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.
அதன் அடிப்படையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 11 ஆயிரத்து 236 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிஇ, பிடெக் படிப்பு - 1 லட்சத்து 39 ஆயிரத்து 648 மாணவர்கள் பதிவு