ETV Bharat / city

"விவசாய நிலங்களை எடுக்காமல் சாலை வேண்டுமென்றால் வீட்டிலேயே இருக்கவேண்டியது தான்" - அமைச்சர் எ.வ.வேலு பகீர்

விவசாய நிலங்கள் பெருமளவு பாதிக்கப்படாத வகையில் சாலைகள் நேர்கோட்டில் அமைக்க வேண்டும்; விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் எடுக்க வேண்டும் என்றால் சாலைகளே இருக்காது வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலைதான் உருவாகும் என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ வேலு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எ.வவேலு
அமைச்சர் எ.வவேலு
author img

By

Published : May 12, 2022, 10:36 PM IST

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் ஜப்பான் நிதி உதவியுடன் சுமார் 1.79 ஏக்கர் பரப்பளவில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இங்கு தரைதளம் உள்ளிட்ட 3 தளங்கள் வடிவமைக்கப்பட்டு, இக்கூடுதல் மருத்துவமனைக் கட்டடம் பொதுப்பணி துறையால் கட்டப்பட்டு வருகிறது. இதனைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் நாசர் ஆகியோர், அதன் 2 தளங்கள் வரை சென்றுப் பார்வையிட்டதோடு நடைபெறும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, 'ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்ட 45 சுங்கச்சாவடிகள் உள்ளன. இங்கு உரிய விதிமுறைகள் பின்பற்றப் படுகிறதா என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர், தமிழ்நாடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளோம்.

மேலும், மாநில அரசே சுங்கச்சாவடிகளைப் பராமரித்து, அதில் வரும் தொகையை சாலை அமைத்த நிறுவனங்களுக்கு அளிக்க முயற்சி செய்து வருகிறோம்.

விவசாய நிலங்களில் சாலைகள் அமைக்கப்படுவதாக கூறுகின்றனர். விவசாய நிலங்கள் பெருமளவு பாதிக்கப்படாத வகையில் சாலைகள் நேர்க்கோட்டில் அமைக்க வேண்டும். விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் எடுக்க வேண்டும் என்றால், சாலைகளே இருக்காது. வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலைதான் உருவாகும்’ எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், ’பாடி முதல் திருநின்றவூர் வரையிலான சென்னை-திருப்பதி சாலை விரிவாக்கப் பணிகள் TPR தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கானப் பணிகள் தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

அமைச்சர் எ.வவேலு பேட்டி

இதையும் படிங்க: ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப்-க்கு தடை; கவலை வேண்டாம்: விசிக இலவசமாக வழங்க முடிவு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.