ETV Bharat / city

‘ஓபிஎஸ் டெல்லி சென்றது வேறு விஷயத்துக்காக’ - கே.எஸ். அழகிரி - TN cong.chief

சென்னை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேறு காரணங்களுக்காக டெல்லி சென்றுள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

ks alagiri
author img

By

Published : Jun 21, 2019, 7:39 PM IST

சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் தங்கபாலு, மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, “தமிழ்நாடு அரசாங்கம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் என்ற நம்பிக்கையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் கேரள அரசிடம் மிகவும் தாமதமாக தண்ணீர் கேட்டுள்ளார். இது அவரின் செயலின்மையை காட்டுகிறது.

மக்களோடு சேர்ந்து தான் அமைச்சர்கள் தங்கள் தண்ணீர் பிரச்னை தீர்த்துக்கொள்ள வேண்டும். முதலமைச்சரை பார்க்க சென்றால் தண்ணீர் கிடைக்கும் என்றால் நாங்களும் அவர் வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு வருகிறோம். தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்தால் மட்டுமே துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேட்கும் ஆயிரம் கோடி ரூபாய் நிதி கிடைக்கும். எந்த நடவடிக்கையும் முறையாக எடுக்காமல் எவ்வாறு நிதி கிடைக்கும். துணை முதலமைச்சர் வேறு நோக்கத்துடன் டெல்லி சென்றுள்ளார்.

மன்மோகன் சிங் தமிழ்நாட்டில் இருந்து மக்களவை உறுப்பினராக வருவது குறித்து திமுக - காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

Intro:Body:சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் காலை 10.30மணி மாலை 5.00மணி வரை நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் தங்கபாலு, மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், தமிழ்நாடு அரசாங்கம் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

கேரளாவிடம் முதல்வர் தண்ணீர் மிகவும் தாமதமாக கேட்டுள்ளார். அதுவும் கடிதம் மூலம் கேட்க உள்ளார். அந்த கடிதம் அப்போது எழுதப்பட்டு தமிழகத்திற்கு எப்பொழுது தண்ணீர் கிடைக்கும். இது அவரின் செயலின்மையை காட்டுகிறது.

மக்களோடு சேர்ந்து தான் அமைச்சர்கள் தங்கள் தண்ணீர் பிரச்சனை தீர்த்து கொள்ளவேண்டும். முதல்வரை பார்க்க சென்றால் தண்ணீர் கிடைக்கும் என்றால் நாங்களும் செல்கிறோம் அவர் வீட்டிற்கு சென்று குளித்து விட்டு வருகிறோம். மக்களோடு சேர்ந்து முதல்வர் எடுத்துக்காட்டாக வாழ வேண்டும்.

தமிழ் நாட்டை வரட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் அப்பொழுது தான் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கேட்கும் 1000கோடி ரூபாய் நிதி கிடைக்கும். எந்த நடவடிக்கையும் முறையாமல் எடுக்காமல் எவ்வாறு நிதி கிடைக்கும். ஒபிஸ் சென்றிருப்பது வேறு ஒரு நோக்கத்திற்காக ஆனால் அதை சொல்லாமல் இதை சொல்லி வருகிறார்.

மன்மோகன் சிங் தமிழகத்தில் இருந்து மக்களவை உறுப்பினராக வந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். அதை பற்றி திமுக - காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.