கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அடுத்த 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதற்கு வரவேற்பு தெரிவித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது பின்வருமாறு:
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனோவின் தாக்கம் இந்தியாவிலும் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அதனால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்கத்தான் பிரதமர் நரேந்திர மோடி சமூக விலகலை அறிவுறுத்தியுள்ளார். 21 நாள்கள் நாடு முழுவதும் ஊரடங்கிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நாம் ஒரு தமிழனாக தமிழ் மண்ணைக் காக்க வேண்டும். ஒரு இந்தியனாக தேசத்தைக் காக்க வேண்டும். இதற்கு முதலில் நம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும். தனிமை. அதுவே நம் எதிர்காலத்தின் இனிமை என்பதை உணர்வோம். பிரதமரின் அறிவுரைகளைக் கடைப்பிடிப்போம். தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை ஆதரிப்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'தன்னையும் காத்து நாட்டையும் காப்போம்' - பிரதமரின் முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு