ETV Bharat / city

அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்தக்கோரிய வழக்கை நிராகரிக்க வேண்டும் - ஓபிஎஸ், ஈபிஎஸ் மனு! - ஓபிஎஸ், ஈபிஎஸ் மனு

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரியும் நிர்வாகிகள் நியமனத்தை ரத்து செய்யக் கோரியும் தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டுமென கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

CM and deputy CM file rejection petition of admk interparty election case

author img

By

Published : Feb 25, 2021, 3:16 PM IST

Updated : Feb 25, 2021, 4:54 PM IST

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர், அதிமுக உட்கட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரியும் நிர்வாகிகள் நியமனத்தை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டுமென அதிமுக கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான அணியே உண்மையான அதிமுகவாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வேறு ஏதோ உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதிமுக தலைவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் தரப்பட்டுள்ளது என்றும் கட்சியில் உறுப்பினராக இல்லாத மனுதாரர் இந்த வழக்கை தொடர அடிப்படை உரிமை இல்லாததால், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், எட்டு வாரங்களில் பதிலளிக்கும்படி மனுதாரர் சுந்தரத்திற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க...'மகாராஷ்டிரா, கேரளாவிலிருந்து வந்தால் 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்'

Last Updated : Feb 25, 2021, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.