ETV Bharat / city

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை விடியா அரசு குறைக்குமா...? - eps on petrol diesel price cut

மத்திய அரசை போல் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியினை விடியா அரசு குறைக்குமா என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

opposition-leader-edappadi-palaniswami-on-petrol-diesel-price-cut

author img

By

Published : May 22, 2022, 4:28 PM IST

சென்னை: இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க, மத்திய கலால் வரியினை இதுவரை இரண்டு முறை குறைத்துள்ளது. முதல் முறையாக சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.5, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.10 குறைத்தது.

அனைத்து மாநிலங்களையும், வரியினை குறைக்க கேட்டுக்கொண்டதை அடுத்து 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைத்தன. ஆனால், தமிழ்நாடு அரசு மாநில வரியினை குறைக்காமல், தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து, மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையினைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.

தொடர்ந்து, மத்திய அரசு இரண்டாம் முறையாக நேற்று (21.5.2022) மத்திய கலால் வரியினை, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 8 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 6 ரூபாயும் குறைத்துள்ளது. மேலும், உஜ்வாலா சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதனால், இந்தியாவில் மற்றப் பொருட்களின் விலைகள் குறையும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.8.22 குறைந்து ரூ.102.63-க்கும், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.6.70 குறைந்து ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தேர்தல் சமயத்தில் திமுக நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள இந்த விடியா திமுக அரசு, தனது 504ஆவது வாக்குறுதியில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், பெட்ரோலுக்கு ரூ.3-ஐ மட்டும் குறைத்துள்ள இந்த விடியா அரசு, டீசல் விலையை இதுவரை குறைக்கவில்லை.

ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், திமுக கட்சியின் பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான, டி.ஆர்.பாலு பேட்டியளித்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

அவ்வாறு செய்தால் குறைந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை குறையும் என்றும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருட்கள் கிடைக்கும் என்றும் கூறினார். பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறையும்போது அனைத்துப் பொருட்களின் விலையும் குறையும்.

இதனால் சிறு வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பயனடைவர். பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைத்து, தமிழ்நாட்டில் வாழும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் என்று அனைத்து தரப்பினரின் நலனையும் காக்க வேண்டும் என திமுக அரசை வற்புறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வரி குறைப்புக்கு பின் பெட்ரோல், டீசல் விலை - சென்னை நிலவரம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.