சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு செப்.8ஆம் தேதி வியாழக்கிழமை
உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், "ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்.8ஆம் தேதி (வியாழக்கிழமை) சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு வரும் செப். 17ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகிறது. இ
ருப்பினும் அவசர அலுவல்களை மட்டும் கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு பணிகள் நடைபெறும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாக்காளர் அட்டை புக் செய்யுங்கள்.. காத்திருக்கிறது பிறந்த நாள் பரிசு..