சென்னை: தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதுவகை ஒமைக்ரான் தொற்று போட்ஸ்வானா, ஹாங்காங், இங்கிலாந்து, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிவேகமாக பரவிவருகிறது. ஒரே வாரத்தில் பெரும்பாலான நாடுகளில் பரவியதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்தியாவில் ஆந்திரா, சண்டிகர், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 37 பேருக்கு ஒமைக்ரான் தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விரைவில் ஒமைக்ரான் பேரலை
இதனிடையே பிரிட்டனில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், "விரைவில் ஒமைக்ரான் பேரலை ஏற்படக்கூடும். இதற்கு எதிராக போடப்பட்ட 2 டோஸ் கரோனா தடுப்பூசிகளும் பயன் அளிக்காது" எனத் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக, பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக அவசரக்கால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்த சூழலில் ஒமைக்ரான் தொற்று அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் வேகமாக பரவ வாய்ப்பு உள்ளதால், அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படலாம் என்ற செய்தியும் பரவி வருகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னதாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலால் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவல் தவறானது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. விடுமுறை அளிக்கும் சூழல் ஏற்பட்டால் அரசு அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விரைவில் ஒமைக்ரான் பேரலை... 2 டோஸ் தடுப்பூசிப் பயனளிக்காது..