ETV Bharat / city

ஒமைக்ரான் பரவல்.. மத்திய அமைச்சருடன் மா. சுப்பிரமணியன் ஆலோசனை!

author img

By

Published : Jan 2, 2022, 12:40 PM IST

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசிகளை விரைந்து செலுத்துவது குறித்தும் மத்திய அமைச்சருடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார்.

அதிகரித்துவரும் ஒமைக்கிறான் பாதிப்பு  மத்திய அரசு ஆலோசனை காணொளி மூலம் ஆலோசனை  ஒமைக்ரான் பாதிப்பில் 5 வது இடத்தில் சென்னை  Omicron case increased in India  Central minister discussed  chennai in 5th place of Omicron spreads
அதிகரித்துவரும் ஒமைக்ரான் பாதிப்பு-மத்திய அரசு ஆலோசனை

சென்னை: நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், ஒமைக்ரான் பாதிப்பும் வேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்ட்வியா அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்கள் குறித்தும், தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடுத்துக் கூறினார்.

மாநிலத்தின் தலை நகரங்களாக உள்ள மாநகராட்சிகளில் கரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கையில் சென்னை ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க:முழு கொள்ளளவை எட்டிய புழல் ஏரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.