ETV Bharat / city

தாலிக்கு தங்கம் தர லஞ்சம் வாங்கி ஏமாற்றிய அலுவலர் முற்றுகை! - தாலிக்கு தங்கம் தர லஞ்சம் வாங்கி ஏமாற்றிய அலுவலர்

தாம்பரத்தில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியின் போது பெண் அலுவலர் லஞ்சம் பெற்று கொண்டு டோக்கன் வழங்காமல் ஏமாற்றியதாக 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

தாலிக்கு தங்கம் தர லஞ்சம் வாங்கி ஏமாற்றிய அலுவலர்

author img

By

Published : Jan 13, 2022, 4:32 PM IST

சென்னை: தாம்பரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு சமூக நலன், திருமண நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன் தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் கலந்து கொண்டனர். 10 பயனாளிகளுக்கு வழங்கிய பின்னர், மிதமுள்ள பயனாளிகளுக்கு, புனித தோமையார் மலை ஒன்றிய தாலிக்கு தங்கம் வழங்கும் அலுவலர் ராணியிடம் வழங்குமாறு அமைச்சர் தெரிவித்து சென்றார்.

இதனையடுத்து பயனாளிகளில் டோக்கன் வழங்குமாறு கேட்ட போது, எந்த வித பதலளிக்காமல் வெளியேற முற்பட்டதால் அலுவலர் ராணியை மடக்கி பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதில் சிலர், இவர் டோக்கன் தருவதற்காக தங்களிடம் 2,000 முதல் 4,000 ரூபாய் வரை பணம் பெற்று கொண்டு ஏமாற்றியதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸில் சேரும் மாணவர்கள் - ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.