சென்னை பசுவழிச்சாலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று (ஜூன்28) பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுகவின் தொண்டர்களுக்கு மிகப்பெரிய எழுச்சி வந்துள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அன்றே திராவிடம் முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்ஜிஆர் விலகி வந்தபோது எம்ஜிஆர் தலைமையில் அதிமுக கட்சி செயல்பட வேண்டும் என தொண்டர்கள் கேட்டுக் கொண்டனர். அதுபோல இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் என தொண்டர்கள் நினைக்கின்றனர்.
நானும் பொதுச்செயலாளராக வரவேண்டுமென எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு வந்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒற்றை தலைமை விவகாரம்; கே.பி முனுசாமி புதிய பொருளாளர் ? - ஈபிஎஸ் ஆலோசனை