தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தில் பராமரிப்புப் பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பை கடந்த டிசம்பர் மாதம், தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், மின்வாரிய தலைமை அலுவலகத்திலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அதுகுறித்து மின்சார துறை வாரியம் வெளியிட்டுள்ள நோட்டீஸில், “மின்வாரிய சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல், 2020 டிசம்பர் 21இல் காலை 9.30 மணியளவில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்தப் போராட்டத்தின் போது ஊழியர்கள் மாநில அளவில் உள்ள அனைத்து தலைமை மின்துறை அலுவலகங்களின் நுழைவாயில்களை மறித்து, அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன் பின்னர், தர்ணா போராட்டத்தில் குதித்து அலுவலத்திலேயே உட்கார்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இந்த மாதிரியான வன்முறை செயல்களில் சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் ஈடுபடுவது, இந்தியத் தொழில் தகராறுகள் சட்டம், 1947க்கு எதிரானதாகும். எனவே, போராட்டங்களில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களும் இது குறித்து பத்து நாளைக்குள் உரிய விளக்கமளிக்க வேண்டும்.
விளக்கம் அளிக்க தவறினால், சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை பாஷ்யம் வாங்கினாரா? - வைகோ காட்டம்