ETV Bharat / city

திருப்பத்தூர் துணைமின் நிலைய பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு!

சென்னை: திருப்பத்தூரில் புதிதாக அமைக்கப்பட்ட 230/110 கேவி துணை மின் நிலையத்தை ஒப்பந்த அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் பராமரிப்பதற்குத் தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

திருப்பத்தூர் துணைமின் நிலையம் பராமரிப்புப் பணி தனியாரிடம் ஒப்படைக்க அறிவிப்பு

author img

By

Published : Nov 5, 2020, 1:53 PM IST

Updated : Nov 5, 2020, 2:08 PM IST

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், மதுரை மாவட்டம் சமயநல்லூர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள துணைமின் நிலையம் ஆகியவற்றை இரண்டு ஆண்டுகளுக்குப் பராமரிப்பதற்கும் இயக்குவதற்கும் தலா ரூ.93.67 லட்சத்திற்கு தனியாருக்கு விடுவதற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர் அழுத்த மின்பாதையை 300 கிலோமீட்டர் நிலத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பராமரிக்க ரூ.3 கோடியில் தனியாருக்கு விடுவதற்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று(நவ.04) மாநில அளவில் தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் மின்சார வாரியத்தில் பராமரிப்புப் பணியினை தனியாருக்கு விடக்கூடாது என தொழிற்சங்க கூட்டமைப்பினர், அதில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை செயற்பொறியாளர் (இயக்குதலும் பராமரித்தலும்) கண்ணன் மூன்றாம் தேதி வெளியிட்டுள்ள கடிதத்தில், 'தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் திருப்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள 230/110 கேவி துணை மின் நிலையத்தை இரண்டு ஆண்டுகளுக்குத் தினமும் இயக்கவும் பராமரிக்கவும்; பழுது ஏற்பட்டால் சரி செய்யவும் ரூ.93 லட்சத்து 67 ஆயிரம் கட்டணமாக நிர்ணயித்து தனியாருக்கு ஒப்பந்தம் அளிக்க அனுமதி அளித்துள்ளது. இதற்குரிய விதிமுறைகளைப் பின்பற்றி, துணை மின் நிலையத்தை தனியாருக்கு வழங்க உத்தரவிட வேண்டும்' என அதில் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் துணைமின் நிலையம் பராமரிப்புப் பணி தனியாரிடம் ஒப்படைக்க அறிவிப்பு
திருப்பத்தூர் துணைமின் நிலைய பராமரிப்புப் பணி தனியாரிடம் ஒப்படைக்க அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தனியார்மயத்தை புகுத்துவதை தொழிற்சங்க கூட்டமைப்பினர் எதிர்த்து வரும் நிலையில், தொடர்ந்து துணை மின்நிலையங்கள் பராமரிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Nov 5, 2020, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.