சென்னை வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானமணி. இவர் சென்னை சவுகார்பேட்டை, கிருஷ்ண ஐயர் தெருவில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் டெலிவரி பாயாக 13 வருடங்களாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பணி முடிந்த பிறகு ஞானமணி தன் நண்பருடன் சவுகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கர் தெருவில், அமைந்துள்ள அமர ராம் என்பவருக்குச் சொந்தமான டீ கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கே அவர், 'பஜ்ஜி சரியில்லை' என்று கடைக்காரரிடம் கூறியதாகவும்; அதற்கு அந்தக் கடையில் வேலை செய்யும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அருண் என்பவர், இந்தியில் அசிங்கமாக ஞானமணியை திட்டியதாகவும் தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்து அருணின் கன்னத்தில் ஓங்கி அறைந்த ஞானமணியை, அருண் தன் கையில் வைத்திருந்த வெங்காயம் வெட்டும் கத்தியால் தலையில் வெட்டியுள்ளார்.
பின்னர் தலையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்டிய நிலையில் நின்றுகொண்டிருந்த ஞானமணியை சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூக்கடை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: