தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் குழு கூட்டத்தில் சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் முதன்மை செயலர் உள்ளிட்ட அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்புக்கு பின்னர் மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பேருக்கு கரோனா சோதனை நடைபெறுகிறது. முக்கிய பகுதிகளில், “பீவர் கிளினீக்” அமைத்து சோதனை நடைபெறுகிறது.
முதலில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியேவை லோசானதாக தோன்றும். ஆனால் அவர்கள் சமூகத்துடன் சமூகமாக கலந்தால் பாதிப்பு அதிகமாகும்.
ஆகவே அவர்கள் பீவர் கிளினீக்கில் சோதனை செய்துகொள்வது நல்லது. மேலும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சுவையிழப்பு ஒரு முக்கியமான கரோனா அறிகுறியாகும். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று கரோனா சோதனை நடத்துகின்றனர்.
கிராமங்களில் சுகாதார ஊழியர்கள் கரோனா சோதனை நடத்தி வருகின்றனர். கரோனா எண்ணிக்கை அதிகரிப்பதால் பலருக்கும் பயம் ஏற்பட்டுள்ளது. சோதனை அதிகரிப்பதால், பாதிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இது குறித்து மக்கள் பயம் கொள்ள வேண்டாம்.
இந்த விவகாரத்தில் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நோய்த்தொற்றை ஆரம்பத்திலே கண்டறிய வேண்டும் என்பதும், இறப்பை குறைக்க வேண்டும் என்பதே நமது முதல் நோக்கம்.
பொதுமுடக்கம் (லாக்டவுன்) நடவடிக்கையை நாங்கள் பரிந்துரைக்கவில்லை. இது ஒரு நல்ல தீர்வும் கிடையாது. ஆனால் சில நேரங்களில் இது தேவைப்படுகிறது.
இந்த லாக்டவுனால் வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளது. மாறாக, எந்தெந்த பகுதிகளில் பரவல் அதிகமாக இருக்கிறதோ, அந்தப் பகுதிகளில் கட்டுப்பாட்டை அதிகரிக்கலாம்.
கோவிட்19 பற்றி பயப்பட வேண்டாம். அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பாதிப்புகள் அதிகரிக்கும் போது சிகிச்சை மீது கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது சில விதமாக ஆன்டி வைரஸ்கள் உதவிபுரியும் என்று கூறியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுக்கு குறைவில்லை” என்றனர்.
மேலும், “சில பகுதிகளில் பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. ஆகவே மக்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: 'சிபிஜக்கு மாற்ற காலம்தாழ்த்துவது இறந்தவர்களுக்கு செய்யும் துரோகம்'