தடையின்மை சான்று இல்லாத மற்றும் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தீவிர ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், கல்வியாளர்கள் குழு ஆய்வு செய்ததன் அடிப்படையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த சுற்றறிக்கையில், தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் சென்னையில் 331 பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.