ETV Bharat / city

மகளிருக்கான இலவசப்பேருந்து கட்டணம் ரத்தா? - அலுவலர் விளக்கம் - Municipal Bus Corporation Managing Director

மகளிருக்கான இலவசப் பேருந்து கட்டணத்திட்டம் ரத்தானதாக வெளியான தகவலுக்கு போக்குவரத்துத்துறை அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 4, 2022, 6:52 PM IST

சென்னை: 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத்தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்ற உடனே மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற திட்டத்தை முதலில் கொண்டு வந்தார்.

இந்தத் திட்டம் தமிழ்நாடு பெண்களிடம் மிகவும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் மாநகரப் பேருந்தை பெண்கள் எளிதில் அடையாளம் காணும் விதமாக பிங்க் நிறத்தில் பேருந்துகளின் முன் மற்றும் பின் புறங்களில் நிறம் அடிக்கப்பட்டது.

இந்நிலையில், பெண்கள் விருப்பப்பட்டால் இலவசப் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி பயணம் செய்யலாம் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஒரு விழாவில் பேசும்பொழுது, பெண்கள் பேருந்துகளில் ஓசியாக பயணம் செய்கின்றனர் எனக் கூறினார். 'ஓசி' என்ற வார்த்தையை அமைச்சர் பயன்படுத்தியதால் மிகப்பெரிய சர்ச்சை உருவானது.

இதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூரில் ஒரு வயதான பெண், பேருந்து நடத்துநரிடம் டிக்கெட்டிற்கு கட்டணம் செலுத்துகிறேன் எனவும், நான் ஓசி பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்ய விருப்பம் இல்லை எனவும் தெரிவித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பரவியது. இதனைத்தொடர்ந்து அந்த வயதான பெண்ணின் மீது வழக்கு தொடரப்பட்டதாகவும் தகவல் பரவின. பின்னர், அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என காவல் துறை அலுவலர்கள் விளக்கம் தெரிவித்தனர்.

இதேபோன்று பல்வேறு இடங்களில் பெண்கள் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய விரும்புவதாக வீடியோ வெளியானது. இந்த நிலையில், விருப்பப்பட்டால் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் செலுத்திப் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை சார்பாக தகவல் வந்துள்ளது என சமூக வலைதளத்தில் வேகமாக தகவல் பரவி வருகிறது.

இது குறித்து மாநகரப் பேருந்து கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம் அவர்களிடம் கேட்டபோது, "விருப்பப்பட்டால் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் போன்ற எந்த ஒரு அறிவிப்பையும் போக்குவரத்துத்துறை சார்பாக தெரிவிக்கவில்லை. பெண்களுக்கான இலவசப் பேருந்து, தற்போது வரை கட்டணம் இல்லாமல் தான் செயல்படுகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் அனுமதித்தால் அந்த 41 கோடி ரூபாய் ரகசியத்தை வெளியிடுவேன் - ஜேசிடி பிரபாகர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.