ETV Bharat / city

சென்னைக்கு அடுத்த 3 நாள்கள் முக்கியமானது - ஏடிஜிபி சந்தீப் மிட்டல்

author img

By

Published : Nov 8, 2021, 9:15 PM IST

Updated : Nov 8, 2021, 10:24 PM IST

சென்னையில் கனமழையை எதிர்கொள்ள அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது எனவும்; அடுத்த மூன்று நாள்கள் மிகவும் முக்கியமானது எனவும் கடலோரப் பாதுகாப்பு குழும ஏடிஜிபி சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார்.

ஏடிஜிபி சந்தீப் மிட்டல், கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபி சந்தீப் மிட்டல், சந்தீப் மிட்டல், SANDEEP MITTAL, Coast Guard Group ADGP Sandeep Mittal
ஏடிஜிபி சந்தீப் மிட்டல்

சென்னை: வடகிழக்குப் பருவமழையால் கடந்த இரண்டு நாள்களாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.

மேலும், மழைநீரில் சிக்கியவர்களை மீட்க காவல் துறை, மாநகராட்சி இணைந்து செயல்பட்டு வருகிறது. கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனை மீறி கடலுக்குள் சென்ற மீனவர்களை மீட்பதற்காக கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1093 என்ற உதவி எண்ணை 24x7 தொடர்பு கொள்ளலாம்

இதன் ஒரு பகுதியாக கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் படையினர், மீனவர்கள், ஓய்வுபெற்ற கடலோர காவல்படையினர் இணைந்து உருவாக்கியுள்ள குழுவை பட்டினம்பாக்கம் கடற்கரையில் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் கூடுதல் தலைமை இயக்குநர் சந்தீப் மிட்டல் ஆலோசனை வழங்கிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

கடலோரப் பாதுகாப்பு குழும ஏடிஜிபி சந்தீப் மிட்டல் பேட்டி

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஏடிஜிபி சந்தீப் மிட்டல், "தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்கள் மிக முக்கியமானது. சென்னையில் கனமழையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் மாநகராட்சி, காவல் துறையினர் இணைந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் படையினர், மீனவர்கள் செயல்பட இருக்கின்றனர்.

குறிப்பாக, இந்தக் குழுவில் நீச்சல் தெரிந்த 100 கடலோர காவல் படையினர், 50 மீனவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற கடலோர காவல் படையினர் இருக்கின்றனர்.

மேலும், மழையில் சிக்கியவர்களை மீட்க மீனவர்களின் படகை கொண்டு செயல்பட இருக்கின்றோம். ஏதேனும், அசாம்பாவிதங்கள் ஏற்பட்டால் 1093 என்னும் கடலோர காவல் கட்டுப்பாட்டு அறை உதவி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் சென்னை மாநகராட்சி!

Last Updated : Nov 8, 2021, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.