ETV Bharat / city

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

author img

By

Published : Mar 31, 2021, 5:35 AM IST

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.

news today on mach 31
news today on mach 31

முதலமைச்சர் குறித்த சர்ச்சைப் பேச்சு: ஆ. ராசா ஆஜராக உத்தரவு

முதலமைச்சர் பழனிசாமி குறித்தும், அவரது தாயார் குறித்தும் அவதூறாகப் பேசியது தொடர்பாக இன்று மாலை 6 மணிக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைத் தேர்தல் அலுவலர் முன்பு ஆஜராகி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆ.ராசா
ஆ.ராசா

பான் கார்டு வைத்திருப்பவர்களா? இன்று தான் கடைசி நாள்

பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. பல முறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த மத்திய அரசு இந்த முறை நீட்டிக்காமல் இன்றுக்குள் இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

பான் எண்ணை ஆதாருடன் இணைக்க கடைசி நாள்
பான் எண்ணை ஆதாருடன் இணைக்க கடைசி நாள்

ஸ்டாலினுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் பரப்புரை

திமுக தலைவர் முக ஸ்டாலினை ஆதரித்து, சென்னை கொளத்தூர் தொகுதியில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.

ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

சரத்பவாருக்கு அறுவை சிகிச்சை

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத்பவாருக்கு மார்ச் 29ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில், பித்தப்பையில் கல் இருப்பது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சரத்பவார்
சரத்பவார்

மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள்

நான்காவது கட்டமாக இன்று மூன்று ரஃபேல் போர் விமானங்கள் குஜராத்துக்கு வர உள்ளன. பிரான்ஸில் உள்ள மெரிக்னாக் விமானப் படைத்தளத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு இந்த மூன்று ரஃபேல் போர் விமானங்களும் புறப்படும். இவை பின்னர் அம்பாலா விமானப் படைத்தளத்தில் உள்ள கோல்டன் ஆரோஸ் பிரிவில் சேர்க்கப்படும். இதன் மூலம் ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

ரஃபேல் போர் விமானம்
ரஃபேல் போர் விமானம்

மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் கரோனா அதிகரிக்கும் நிலையில், அது குறித்து மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

'கர்ணன் யுத்தம்' இன்று வெளியீடு

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் 4ஆவது பாடல் இன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’உட்ராதீங்க யப்போவ்’ என்ற இந்த பாடலுக்கு கர்ணன் யுத்தம் என தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் இந்தப் பாடலுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

'கர்ணன் யுத்தம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.