ஜூன்-20: பெட்ரோல் விலை ரூ.98.40, டீசல் விலை ரூ.92.58
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.98.40ஆகவும், டீசல் விலை ரூ.92.58ஆகவும் உள்ளது.
![NEWS TODAY on june 20](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12197181_petrol-diesel-price.jpg)
- தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![NEWS TODAY on june 20](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-01-heavy-rainfall-possibility-forcast-7203415-vis_18062021094705_1806f_1623989825_749_1806newsroom_1624019219_992.jpg)
- பொது போக்குவரத்து குறித்து முக்கிய அறிவிப்பு
கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் அடுத்ததாக ஊரடங்கு உத்தரவில் என்னென்ன தளர்வுகளை அளிக்கலாம் என்பது குறித்து மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜூன் 19) ஆலோசனை நடத்தினார். இச்சூழலில், பொது போக்குவரத்து மீண்டும் தொடங்குமா என்பது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகிறது.
![NEWS TODAY on june 20](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12197181_stalin.png)
- தெலங்கானாவில் பூரண ஊரடங்கு நீக்கம்
தெலங்கானா மாநிலத்தில் அமலில் இருந்த ஊரடங்கு இன்று முதல் விலக்கப்பட்டுள்ளது. ஆனால் கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மக்களும், வணிகர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளத
![NEWS TODAY on june 20](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12197181_30_12197181_1624154831355.png)
- WTC FINAL: மூன்றாவது நாள் ஆட்டம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் இன்று பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது.
![NEWS TODAY on june 20](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/83660453_2006newsroom_1624144855_491.png)