கரோனா தொற்று காரணமாக, தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு, தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரி அரசு, கட்டுப்பாடுகளுடன் கடற்கரை சாலையில் புத்தாண்டை கொண்டாட 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கியது.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் இரவு 10 மணியளவில் கடற்கரை சாலையில் குவிந்தனர்.
இதனிடையே, ஒயிட் டவுன் பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை வாகன நிறுத்தங்களில் நிறுத்திவிட்டு, கடற்கரைச் சாலைக்கு நடந்தே வந்தனர். இதைத் தொடர்ந்து, கடற்கரைச் சாலைக்கு வந்த அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.
புத்தாண்டு கொண்டாட்டம்
புத்தாண்டை வரவேற்றனர். இரவு 12 மணிக்கு 'ஹாப்பி நியூ இயர் 2021' என்ற கோஷத்துடன் மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர்.
இதில், இளைஞர்கள், பெரியோர், சிறுவர் சிறுமியர் தங்களுக்குள் தழுவியும், கைகளை கொடுத்ததும் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதையும் படிங்க: உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாட்டம் தொடக்கம்