மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழ்நாடு முழுவதும் இன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதனையொட்டி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்திவருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் 11 மணி நேர நிலவரப்படி 30 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் ஏராளமான புதிய வாக்காளர்கள் தங்களது வாக்குகளை முதன்முறையாக செலுத்தியிருக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “முதல்முறையாக வாக்களித்தது மகிழ்ச்சியளிக்கிறது. வாக்குச்சாவடிகளில் ஏற்பாடுகள் நல்லமுறையில் செய்யப்பட்டிருந்தன. அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.