ETV Bharat / city

உள்நாட்டு விமான பயணிகளுக்கு இ-பதிவு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள்

தமிழ்நாட்டிற்கு வரும் உள்நாட்டு விமான பயணிகளுக்கு தொ்மல் ஸ்கேனா் பரிசோதனை, இ- பதிவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு விமான பயணிகளுக்கு விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள்

author img

By

Published : Dec 17, 2021, 9:56 AM IST

Updated : Dec 17, 2021, 10:02 AM IST

சென்னை : இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவிவருவதால்,இந்திய விமானநிலைய ஆணையம் அனைத்து விமானநிலையங்களுக்கும் பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுவரை சா்வதேச விமான பயணிக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது உள்நாட்டு விமான பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.உள்நாட்டு பயணிகள் அனைவருக்கும் தொ்மல் ஸ்கேனா் பரிசோதனை, இ- பதிவு உள்ளிடட்வை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் சென்னை,கோவை உள்ளிட்ட விமானநிலையங்களுக்கும் புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் மாநிலம் வாரியாக வெளியிட்ட, கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் விவரத்தை பார்க்கலாம்.

"கேரளாவில் இருந்து, தமிழ்நாடு வரும் பயணிகள் அனைவரும், கரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது, 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட, கரோனா நெகடிவ் சான்றிதழ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து தமிழ்நாடு வரும் விமான பயணிகளுக்கு இ – பதிவு கட்டாயம்.

கோவை விமான நிலையத்திற்கு வரும் இதர மாநில பயணிகள் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம். சர்வதேச பயணிகளை பொறுத்தவரை, மத்திய அரசின் கரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். இதே போல, ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான கரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களை, www.aai.aero என்ற இந்திய விமான நிலையங்களின் ஆணைய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : "அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், இல்லையென்றால்..."- அமைச்சர் துரைமுருகன்

Last Updated : Dec 17, 2021, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.