இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தங்களது விவரங்கள் உள்ள பட்டியலில் திருத்தங்களை என்.வி.எஸ்.பி செயலி மூலம் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மேற்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வாக்காளர்களால் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் திருத்தங்கள் சரிபார்க்கப்பட்டு 15.10.19 அன்று வெளியிடப்படவிருக்கும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.