சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மாதுபானக் கடைகளை அமைக்கும்போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில், அதன் சட்டவிதியில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி புதிய டாஸ்மாக் மதுபானக் கடைகளை அமைக்கும்போது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்க வேண்டும்.
மக்களின் மாற்று கருத்துகளை பரிசீலிக்காமல் எந்த டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது. ஒருவேளை மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்கினால், அவரது முடிவை எதிர்த்து 30 நாள்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகள், கல்வி நிறுவன பகுதிகள், பெண்கள் அதிகம் நடமாடும் பகுதிகள், மாணவர்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விளைநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு