கரோனா பாதிப்பு காரணமாக பொருளாாதர நடவடிக்கைகள் பெரும்பாலும் மந்த நிலையிலேயே உள்ளன. நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக இந்த நிலை தொடரும் நிலையில், சுற்றுப்புறத்தை கிருமிகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் திருச்சியைச் சேர்ந்த சோழா குழும நிறுவனங்களைச் சேர்ந்த யூவிசி லைஃப் லைட் (UVC Life Light) நிறுவனம் புற ஊதாக் கதிர்கள் மூலம் தூய்மைப்படுத்தும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயன்படுத்தலாம் என்றும், நோய்த்தொற்று குறித்த அச்சமின்றி பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்பம் பல காலமாக பயன்பாட்டில் இருந்தாலும் ஆசியாவிலேயே முதல் முறையாக வணிக ரீதியாக விற்பனைக்கு வந்துள்ளது.
இதை வைத்து காற்று, தண்ணீர், சுற்றுப்புறம் என அனைத்தும் தூய்மைபடுத்த முடியும் எனறும் 99 விழுக்காடு கரோனா வைரஸ்கள் 6 நொடிகளில் அழிக்கப்பட்டுவிடும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: தர்மபுரியில் 50 அடி கிணற்றில் விழுந்த யானை - மீட்பு பணி தீவிரம்