ETV Bharat / city

இரண்டு குட்டிகளை ஈன்ற ‘பாராசிங்கா’ மான்! - தமிழ் செய்திகள்

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சதுப்புநில மான் என அழைக்கப்படும் ‘பாராசிங்கா’ மான் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.

‘பாராசிங்கா’ மான்
‘பாராசிங்கா’ மான்
author img

By

Published : Jun 28, 2021, 10:29 PM IST

சென்னை: அறிஞர் அண்ணா உயிரியில் பூங்கா துணை இயக்குநர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சதுப்புநில மான் என அழைக்கப்படும் ‘பாராசிங்கா’ மான் இரண்டு குட்டிகளை கடந்த ஜூன்11 மற்றும் ஜூன் 14 ஆகிய தேதிகளில் ஈன்றுள்ளது.

இந்த விலங்கினம் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) பட்டியலில் உள்ள விலங்கினங்கள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பூங்காவிலுள்ள சருகுமான் கடந்த ஜூன்.9ஆம் தேதியன்று குட்டியை ஈன்றுள்ளது. இன்றைய அளவில் இப்பூங்காவில் மொத்தம் 13 சருகு மான்கள் உள்ளன.

மேலும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி சிங்கவால் குரங்கு ஒரு குட்டியை ஈன்றுள்ளது. இரண்டு மாதங்களான அக்குட்டியானது ஏனயை சிங்கவால் குரங்களின் கூட்டத்துடன் இணைந்து நலமாய் உள்ளது. சிங்கவால் குரங்கு இனவிருத்தி பாதுகாப்பு மையமாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திகழ்கிறது.

புதிதாய் பிறந்த அனைத்து குட்டிகளும் விலங்கு காப்பாளர்கள், வனவிலங்கு மருத்துவர்களால் தொடர் கண்காணிப்பில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள்...மருத்துவமனையில் இருந்து அட்வைஸ் தரும் பாத்திமா பாபு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.