சென்னை விமான நிலையத்தில் சுமார் ரூ.2,500 கோடி செலவில் ஒருங்கிணைந்த முனையம் டிஜிட்டல் மயமாகக் கட்டப்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டு தொடங்கிய பணிகள் சில மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில் அவை புதிய பன்னாட்டு முனையமாக செயல்பட உள்ளது. சுங்கத்துறை, குடிபெயர்வு, பாதுகாப்பு பிரிவுகள் என பல்வேறு அம்சங்களுடன் தயாராகி வருகிறது.
நவீன தொழிநுட்ப வசதிகள் ; இந்த புதிய முனையம் சர்வதேச தரத்தில் முற்றிலும் தானியங்கி வசதிகளைக் கொண்டதாக அமைகிறது. அதன் உள்பகுதியில் கலை, கலாசாரம், மொழி, பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஓவியங்கள், சுற்றுலா இடங்கள் இடம்பெறுவதோடு, அதன் மேற்கூரை அழகுர வடிவமைக்கப்பட்டுள்ளன. இரண்டு டெர்மினல் கட்டடங்கள், பேக்கேஜ் கன்வேயர், ஏர் கண்டிஷனர், ஐ.டி மற்றும் ஏர்போர்ட் சிஸ்டம், மல்டி லெவல் கார்பார்க்கிங் என மிகப்பெரிய நவீன தொழிநுட்ப வசதிகளோடு சர்வதேச அளவில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகள் வருகை இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய பன்னாட்டு முனையம்: கண்ணைக் கவரும் வகையில் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. முனையத்தின் கீழ்ப் பகுதியை அழகுபடுத்தும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து விளக்குகள் அனைத்தையும் இயக்கி சோதனை நடைபெற்றது. அடுத்த 2 மாதங்களில் விமான சேவை நிறுவனங்கள், பாதுகாப்பு பிரிவு உள்ளிட்டவை ஒருங்கிணைந்த புதிய பன்னாட்டு முனையத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய செயலி அறிமுகம்: அதேபோல், சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் விமானநிலையத்தின் முன்பகுதியில் 3.36 லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில், ரூ.250 கோடி மதிப்பீட்டில் ஆறு தளங்களுடன் கூடிய அடுக்குமாடி வாகன நிறுத்தம்,வணிக வளாகங்கள், முக்கியப் பிரமுகர்களுக்கான ஓய்வு அறைகள் கட்டப்பட்டு வருகிறது. இதன் பணிகள் 80% முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக "புதிய செயலி" ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளனர். அதில் பயணிகள் சிரமம் இன்றி சுலபமாக விமானப் பயணம் மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்ட உள்ளதாக சென்னை விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார் கூறியதாவது, 'சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய முனையத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சில மாதங்களில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் பிரத்யேகமான செயலி ஒன்றை சென்னை விமான நிலைய ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது.
குழப்பம் தீரும்: அதில், பயணிகள் விமான நிலையத்திற்குள் எங்கு செல்ல வேண்டும். போர்டிங் நேரம், குடியுரிமை சோதனையில் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்.எங்கு காத்திருக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும் .மேலும், விமான நிலையத்தில் சோதனைகள் முடித்து காத்திருக்கும் நேரத்தில் உணவு மற்றும் டீ காபி அனைத்தும் இருக்கும் இடத்திலிருந்தே இந்த செயலில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பயணிகளுக்கான வசதிகள் அனைத்தும் அந்த செயலில் இருக்கும். இதற்கானப் பணிகளை சென்னை விமான நிலைய ஆணையம் மேற்கொண்டு வருகிறது. புதிதாக விமான நிலையம் வரும் பயணிகள் குழப்பமடையல் இருக்க இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும்.
வணிக வளாகம் : ஆறு தளங்கள் கொண்ட கார் பார்க்கிங்கில் 2,100 கார்கள் வரை நிறுத்த முடியும். மேலும் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக கார் பார்க்கிங் பக்கத்தில் ஆறு மாடிகள் கொண்ட வணிக வளாகத்தில் ஹோட்டல்கள், ஐந்து திரையரங்கங்கள், கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்திலிருந்து விமான நிலையத்திற்கு நடந்து செல்லும் வகையில் இணைப்பு மேம்பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்து.
மேம்பாலத்தின் மீது மேற்கூரை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. விமான நிலைத்தில் கட்டப்பட்டும் வணிக வளாகத்தில் பொதுமக்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், புதிதாகக் கட்டப்படும் ஒருங்கிணைந்த முனையத்தில் விமான பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், இன்னும் ஓரிரு மாதங்களில் கார் பார்க்கிங் அடுக்குமாடி கட்டடம், புதிய முனையத்தில் நடைபெற்று வரும் பணிகள் முழுமை அடைந்து பயணிகளின் வசதிக்காக சேவையை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் அதிநவீன டாக்ஸிவே அமைக்கப்படும். மேலும், இந்த பணிகள் முடிவடைந்த உடன் சென்னை விமான நிலையத்தில் மிகப்பெரிய பசுமை நிறைந்த கார்டன் ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதில், பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவிற்குப் பசுமையாகவும் அழகாகவும் அமைக்கப்பட உள்ளது.
இதனால், சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை விமான நிலையம் செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்பைஸ் ஜெட் விமானம் குலுங்கிய சம்பவம் - குழு அமைத்து தீவிர விசாரணை...!