ETV Bharat / city

ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்கியதை எதிர்த்த வழக்கு: ஆக.12-இல் விசாரணை

author img

By

Published : Aug 10, 2020, 1:22 PM IST

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது அண்ணன் மகன் தீபக் தாக்கல் செய்த வழக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

highcourt
highcourt

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா நிலையம் இல்லம் அமைந்துள்ள இடத்திற்கு 68 கோடி ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து, நிலம் கையகப்படுத்தும் அலுவலர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, 68 கோடி ரூபாயை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தி, வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமையாக்கி அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்த உத்தரவை எதிர்த்தும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த தனி நீதிபதி, இவ்வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில், ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழ்நாட்டு மாணவர்கள் - முதலமைச்சர் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.