ETV Bharat / city

செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள் - நீட் தேர்வு முடிவுகள் 2022

இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்

author img

By

Published : Aug 26, 2022, 11:08 AM IST

சென்னை: இந்தியாவில் உள்ள இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு ஜூலை மாதம் 17ஆம் தேதி 497 நகரங்களில் 3570 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 தேர்வர்கள் எழுதி இருந்தனர். முதல்முறையாக துபாய், பாங்காக், கொழும்பு, தோஹா, காத்மாண்டு, கோலாலம்பூர்,சிங்கப்பூர் உள்ளிட்ட இந்தியாவிற்கு வெளியில் 14 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது. அத்துடன் குறியீட்டு விடைத்தாள் வரும் 30ஆம் தேதி வெளியாகும் எனவும், http://neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்
செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்

மேலும் விடைத்தாள் மீது ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்புபவர்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் எனவும், விடைத்தாள் நகல் பெற விரும்புபவர்களும் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு திட்டத்தில் முறைகேடு வழக்கு...பதிலளிக்க கால அவகாசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.