நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முதலாமாண்டு மாணவர் உதித் சூர்யாவும், அவரது தந்தையும் நேற்று கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக தேனிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதனையடுத்து மாணவர், அவரது தந்தை, கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் மீது மூன்று பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.