ETV Bharat / city

இனி பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட்! - கடும் எதிர்ப்பு! - பி.எஸ்சி. லைப் சயின்ஸ்

சென்னை: பி.எஸ்சி. நர்சிங், பி.எஸ்சி. லைஃப் சயின்ஸ் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பிற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

neet
neet
author img

By

Published : Mar 13, 2021, 4:03 PM IST

இந்தியா முழுவதும் பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைஃப் சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கு, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 2021 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள நிலையில், பி.எஸ்சி படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் எனக் கூறப்பட்டிருப்பது, பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறும்போது, ”ஏற்கனவே மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து சித்தா, யுனானி, ஆயுர்வேதா படிப்பிற்கும் நீட் கொண்டுவரப்பட்டது. இந்தாண்டு பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைஃப் சயின்ஸ் படிப்பிற்கும் நீட் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது, மாநில உரிமையை பறிக்கும் செயலாகும்.

இனி பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட்! - கடும் எதிர்ப்பு!

இது கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரானது. மத்திய அரசின் இடங்களுக்கு மட்டும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். மாநில அரசின் இடங்களுக்கு தனது கொள்கையை மத்திய அரசு புகுத்துவதை உடனடியாக கைவிட வேண்டும்” என்றார்.

இது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது, ” நீட் தேர்வு ஆரம்பிக்கும் போது உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்த மத்திய அரசு, எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கு மட்டுமே நீட் தேர்வு என்றது. ஆனால், அதனை மாற்றி கடந்த ஆண்டு சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை கொண்டு வந்தனர். ஆண்டு தோறும் அதனை விரிவுப்படுத்தி வருகின்றனர்.

'இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்'

இனிமேல் நீட் தேர்வு இருந்தால் தான் மருத்துவப்படிப்பு படிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கி வருகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இது மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்து படிக்க வைப்பதுடன், பயிற்சி மையங்களுக்கு அனுப்பி படிக்க வைக்கும் நிலையை உருவாக்கும். எனவே எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ், படிப்புகளைத் தவிர மற்ற படிப்புகளுக்கு, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவமனைகள் எவ்வாறு கையாளுகின்றன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.