சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையார் கடற்படைத் தளத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கடற்படை அலுவலர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஜோகிந்தர்(25) என்ற கப்பற்படை அலுவலர் மார்பின் மீது ரப்பர் பந்து விழுந்ததுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே மயங்கி விழுந்த ஜோகிந்தரை, சக அலுவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சக அலுவலர்களையும், குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.