கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தானில் தேசிய அளவில் டெக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 33 மாநிலங்களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து 25 மாணவர்கள் பங்குபெற்றனர். இந்தப் போட்டி மூன்று எடை பிரிவின்கீழ் நடைபெற்றது. இதில் 25 முதல் 26 கிலோ எடைப் பிரிவில் பங்குபெற்ற மாணவர் ரோஷன் குமார் வென்கலம் பதக்கம் வென்றார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையம் வந்த ரோஷன் குமாருக்கு பெற்றோர் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியிடம் வாழ்த்து பெற்றார்.
போட்டியில் வென்றது குறித்து செய்தியாளர்களிடம் ரோஷன் குமார் கூறுகையில், அதிக அளவில் போட்டிகளில் பங்குபெற்று தங்கம் வென்று தமிழருக்கு பெருமை சேர்ப்பதே தனது லட்சியம் என்று கூறினார். மேலும் விளையாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி... ஆர்வமுடன் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள்!