ETV Bharat / city

முருகனுக்கு 6 நாட்கள் பரோல் கேட்டு நளினி மனுத்தாக்கல் - Nalini petitions for 6 days parole for Murugan for medical reasons

மருத்துவக் காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நளினி மனுத்தாக்கல்
நளினி மனுத்தாக்கல்
author img

By

Published : Jun 1, 2022, 7:21 PM IST

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழ்நாடு அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருப்பதாகவும், ஆனால் வேலூர் சிறையில் இருக்கும் கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் விடுதலை தீர்மானத்தின்படி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

மருத்துவக் காரணங்களுக்காக கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி கடந்த மே 26ஆம் தேதி தானும், மே 21ஆம் தேதி தனது தாய் பத்மாவும் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்ததாகவும், அவை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நாளை (ஜூன் 02) விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: 'தமிழ் தெரிந்தவர்களை ஒன்றிய அரசு அலுவலகங்களில் பணியில் அமர்த்த வேண்டும்' - சிஐடியூ கோரிக்கை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.