சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முகமது ஃஹனீப் பாகவி என்ற பெயரில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் உட்பட 5 கோயில்களுக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அக்கடிதத்தில் பாபர் மசூதியைப் போன்று இங்குள்ள கோயில்களையும் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முகமது ஃஹனீப் பாகவியிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அவரது பெயரில் அடையாளம் தெரியாத நபர் கடிதம் எழுதியிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஜமாஅத் துல் உலமா அமைப்பினர் இன்று சென்னைக் காவல் ஆணையரிடம், இப்பிரச்சனையில் உரிய விசாரணைக்கோரி புகாரளித்தனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பை சேர்ந்த சேக் தாவூத், “ எங்கள் அமைப்பின் துணைத் தலைவர் முகமது ஃஹனீப் பாகவியின் பெயருக்கு அவதூறு பரப்பும் வகையில் யாரோ மிரட்டல் கடிதத்தை எழுதியிருக்கிறார். மதப்பிரச்னையை உண்டாக்கும் நோக்கில் இக்கடிதத்தை எழுதிய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம் “ என்றார்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!